Breaking News

தென்பகுதி ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு – முதலமைச்சர் !

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தில் வெளியிடும் கருத்துக்களை தென்பகுதி ஊடகங்க ள் முற்றிலும் கருத்து முரணான வரி யில் தொடுத்து தகவலாக பிரசுரித்து தன்னை பயங்கரவாதியாக சித்தரிக்க எத்தணிப்பதாக வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்ற ஞ்சாட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகிய சுதந்திர ஊடக அமைப்பு பிரதி நிதிகளு டனான சந்திப்பின்போதே மேற்கூறிய கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். ஊட கவியலாளர் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது சிறப்பெனக் குறிப்பிட்டதுடன் தான் தெரிவி க்கும் கருத்துக்களை வடக்கிலுள்ள சில ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிடு வதாகவும், இதனால் மக்களுக்கு தவறான புரிதல் ஏற்பட வழியாக அமைவ தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தென்பகுதி பத்திரிகைகளைத் தான் வாசிப்பதில்லையெனவும் இதற்கு வேலை ப்பழு மட்டும் காரணமில்லையெனவும், நேரம் பிந்திய நிலையில் அப்பத்திரி கைகள் விநியோகிக்கப்படுவதே காரணமெனக் குறிப்பிட்டுள்ளார்.  

வடக்கில் தான் தெரிவிக்கும் கருத்துக்களை முற்று முழுதாக முரண்பட்ட வகையில் திரிபுபடுத்தி தென்பகுதி பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இதனால், என்னைப் பயங்கரவாதியாக சித்தரிக்கவும் முயல்கின்றன எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.