Breaking News

மஹிந்த அணியினர் இன்று யாழ் விஜயம்


மஹிந்த அணியினர் இன்று யாழ்ப்பாணத்தில் அரசியல் ரீதியான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அமைச்சர்பெசில் ராஜபக்ஷ தலைமையில் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இன்றும், நாளையும் அவர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனயின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதுடன், நல்லை ஆதீனம் உட்பட இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களையும்பெசில் ராஜபக்ஷ சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.