துடுப்பாட்டத்தில் ஜொலிக்கும் இலங்கை அணி
இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் நிரோஷன் திக்வெல்ல 83 ஓட்டங்கள் அடித்திருந்தார் . பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் , நேற்றைய ஆட்ட முடிவில் , எந்த விக்கெட்டையும் இழக்காமல் 64 ஓட்டங்கள் ஆடி எடுத்திருந்தது .இந்திய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்த இலங்கை அணி பொறுப்பாக ஆடி , 400ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளது நல்லதொரு மாற்றமாக நோக்கப்படுகிறது .
அபுதாபியில் விளையாடப்படும் இந்த டெஸ்ட் போட்டியில் , இலங்கை அணி அடித்த 155 ஓட்டங்கள் , கடந்த ஆறு டெஸ்ட் இன்னிங்ஸுகளில் , மிகச் சிறப்பானது என்பது இங்கே கவனிக்கத் தக்கது