யாழ்ப்பாணம் வழமையான நிலையில்.
மாணவி வித்தியா படுகொலை குற்றவாளிகளை தப்பிக்க உதவியதாக கூறப்படும் அமைச்சர் விஜயகலா மற்றும் சட்டத்தரணி தமிழ்மாறன் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது என திடீரென நேற்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
எனினும் இதற்கு எந்தவொரு அமைப்பும் ஆதரவு தருவதாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடாததால் ஹர்த்தால் அனுஷ்டி க்கப்படவில்லை. இந்நிலையில் பாடசாலைகள், அலுவலகங்கள், அரச தனியார் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.