ஜெனிவா வீதியில் சிலம்பம் சுற்றிய வைகோ - வைரலாகும் வீடியோ
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது ஈழத்தமிழர்களின் உரிமையை பற்றி தொடர்ந்து பேசினார். இதனால் சில சிங்களர்கள் அவரை தாக்கவும் முயன்றனர். இதையடுத்து அவருக்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் அமைத்து இலங்கை படுகொலை பற்றிய புகைப்படங்களை பகலில் கண்காட்சியாக வைத்து, இரவில் அவற்றை அகற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று பகலில் கூடாரம் அமைக்கும்போது அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து சிலம்பம் சுற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.