Breaking News

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு நல்க மகாநாயக்க தேரர்களை காணவுள்ளார் - சம்பந்தன்!


வட-கிழக்கு புதிய அரசியலமைப்பி னை உருவாக்கிய வழிநடத்தல் குழு வின் அறிக்கை எதிர்வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஒப்படை க்கப்பட்டதன்பின்னரே இரா.சம்பந்தன் அரசியலைப்பிற்கான ஆதரவிற்காக மகாநாயக்க தேரர்களை காணவு ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, பௌத்தத்திற்கே முன்னுரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் இவ்வரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டியே இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களை காணவுள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்க தேரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ள துடன் அரசமைப்பின் மறுசீரமைப்பு மாத்திரமே போதுமெனக் குறிப்பி ட்டுள்ளனர். 

இந்நிலையில், இடைக்கால அறிக்கையை மகாநாயக்க தேரர்களிடம் வழங்கி, தமிழ் மக்கள் பிரிவினையைக் கைவிட்டுள்ள நிலையில் புதிய அரசியல மைப்புக்கு ஆதரவு நல்கி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான தேவையை பயன்படுத்தத் தவறிவிடவேண்டாமெனக் கேட்டுக்கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இரா.சம்பந்தன் இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களையும் சந்தித்து இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.