உண்ணா விரதப் போராட்டம் கேப்பாபுலவு நிலமீட்பிற்காக !
கேப்பாபுலவு தமது உரிமை நிலத்தை மீட்டுத்தருமாறு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை க்கைவிடுவதில்லையென கேப்பா புலவு பூர்வீக கிராம மக்கள் ஆணித்த ரமாக தெரியப்படுத்தியுள்ளனா். 3 மாத கால அவகாசம் தருமாறு கேட்ட நிலையிலும் அதற்கு மறுப்பு தெரிவித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து உண்ணும் உணவு கூட இல்லாத நிலையில் தமது போராட்டத்தை பலத்த கஸ்ரங்களுக்கு மத்தியில் நடாத்தி வருகின்றனர்.
கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் 187 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இரவு பகலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லையெனவும் மக்கள் உறுதியாகவுள்ளனர். உடமைகளையும் உறவுகளையும் அங்கங்களையும் இழந்த பின் உரிமை இருப்பிடத்தையும் நாம் இழக்கத் தயார் இல்லையென கம்பீரான போராட்டம் நடாத்தி வருகின்றனர்.