வ.கி. இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை – இராணுவத்தளபதி !
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்சமயம் ஒரு இலட்சத்து 80ஆயிரம் இராணுவத்தினர் நிலைகளில் இல்லை. இராணுவ முகாம்களை அக ற்றுவது நல்லதல்ல. அவர்களை அக ற்றும் நோக்கமும் எமக்கு இல்லை யென இராணு வத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையி லேயே படையினர் செயற்படுவதாகவும் இராணுவம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய தேவையேற்டின் வௌிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் ஆக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்த தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க வழிபாடுகளின் பின் ஊடகங்களிற்கு செவ்வி வழங்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
வடக்கில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் இராணு வத்தினர் தற்போதுள்ளதாக குறிப்பிடுவது தவறெனவும் இராணுவத்தின் எண்ணிக்கையில் யாருக்கும் பொய்யான தகவல் தேவையில்லை என்றார்.
வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டு இருக்கவில்லை.
யுத்தத்தின் பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று தேவைக்கேற்ற இராணுவம் மட்டுமே உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கு ஏற்பவும் ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்தின்படியே வட க்கில் படையினர் நிலையெடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையிலே இராணு வம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாகும்.
அவர்களை வடக்கு கிழக்கில் இருந்து வௌியேற்ற எந்த தேவையும் இல்லை. இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபடவில்லை.
இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தனர்.
நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பயணத்தில் சிங்கள, பௌத்த மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதன் விளக்கம் முதலமைச்சருக்கு தெரிந்திருக்கு மென நம்புகிறேன்.
நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நான் முதலமைச்சரிடத்தில் கேட்டிருந்தேன். முதலமைச்சர் பீடாதிபதிகளை சந்தித்துள்ளமை போற்றத்தக்க விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செய ற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதே னும் தெரிந்துகொள்ளவேண்டியதேவை இருப்பின் பகிரங்கமான கலந்துரை யாடலுக்குத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.