தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் : யாழில் எம். ஏ. சுமந்திரன் (காணொளி)
தமிழ் மக்களின் நியாயமான அரசி யல் அபிலாசைகள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தீர்க்கப்பட வேண்டுமென்பதில் அனைத்து நாடு களும் ஒன்று சேர்ந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சும ந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழர சுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வ நாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
32ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அவரினின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தா ர்த்தன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், எதிர்கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறு ப்பினர்களான பா.கஜதீபன், கேசவன் சயந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பொது மக்கள் ஆகியோர் கலந்து நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் வாரங்களுக்குள் வெளிவரும் என தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தன், புதிய அரசியல் யாப்பு தொடர்பாக வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்கள் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.