இராணுவ அதிகாரியை சர்வதேச யுத்த நீதிமன்றிற்கு அழைப்பதை எதிர்ப்பதாக - பொன்சேகா!
இராணுவத்திலுள்ள சில குற்றவாளி களுக்கு எதிராக சட்டத்தை முன்னெ டுக்குமாறு வேண்டினால், சக இராணு வத்தினரையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சி ப்பதாக கிரிபத்கொட பிரதேசத்தில் ஊடகங்களுடன் உரையாற்றுகையில் பீல்ட் மாசல் சரத் பொன்சேகா தெரிவி த்துள்ளார்.
மேலும் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புத்த பிக்குகள் தொடர்பில் விமர்சிக்கப்படுவது தவிர்க்க முடியாதெனவும் பீல்ட் மாசல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.