இரட்டைமலை சீனிவாசன் நினைவில் இன்று.!
காலம் காலமாக மதப் பிரச்சினை, சா திப் பிரச்சினை காரணமாக சக மனித ர்களை மனிதர்களாகக் கூட பார்க்கவி யலாத அளவினுக்கு சாதி வெறி இந்த மண்ணில் தாண்டவமாடிய சூழலில், எளிய, தாழ்த்தப்பட்ட, மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிய புரட்சி யாளர் டாக்டர். அம்பேத்கர் அவர்களுடன் தமிழகத்திலிருந்து இணைந்து செய லாற்றியவர் ராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசன். திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செய ல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் தொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இத ழையும் செயற்படுத்தியவர்.
சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை செயற்பட்டவர் தான் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).
இளமைக்காலம்
சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்கு மகனாக அவதரித்தார்.
தெய்வபக்தி மிகுந்த குலத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயர் சூடப்பட்டது. தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதி விட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் எனப் பெயர் பெற்றார்.
கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமா கவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்து நகர்ந்தது.
அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவ ரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் நகர்ந்தனர்.
வாழ்க்கை வரலாறு நூல்
இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்க ள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளி யிட்டார்.
இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள முடிந்தது.
கல்வி யும் குடும்பமும்
திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார்.
பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோரு டைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றியை தனதாக்கினார்.
குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகவே எந்நேரமும் சிந்தித்தார், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திரு மணம் புரிந்தார்.
இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீல கிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தாளராக பணி புரிந்தார். பத்து ஆண்டுகள் பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்குச் சென்றார்.
ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்ட க்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்ட துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்த கொடுமைகளும் காரணமாக அமைந்தன.
இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடை ந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் பட்டியலின சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணிக்கத் தூண்டியது.
சமூகப்பணி
தொடர்ச்சியாக எளிய மக்களுக்காக பல விதங்களிலும், வடிவ ங்களிலும் போராடிய இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாள் இன்று.
இன்னமும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதிய பாகுபாடுகள், தீண்டா மைகள் தீராதபோது, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுகளைப் போற்றி சாதிய பாகுபாடுகளை ஒழித்திடுவோம்.