Breaking News

'கடல் காகம் 2017' போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி வாழ்த்துக்கள்

தொடர்ச்சியாக எட்டாவது தடவையா க ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டு ப்போர்ப்பயிற்சி செயற்பாடான 'கடல் காகம் 2017' (தியகாவா) போர்ப் பயிற்சி க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே ன வாழ்த்துக்களை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தை அடிப்படையா க வைத்து நடைபெறும் இந்த கூட்டு ப்போர்ப்பயிற்சி செயற்பாடானது ஸ்ரீல ங்கா முப்படையினர் ஏனைய 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய பாது காப்பு இராணுவத்தினரின் பங்கு பற்றலின் இப் போர்ப்பயிற்சி இம்மாதம் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமானது. 

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற போர்ப்பயிற்சியை தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழி ல்நுட்பத்தின் ஊடாகப் பார்வையிட்ட ஜனாதிபதி 'கடல்காகம்' யுத்த பயிற்சி யில் இணைந்து கொண்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு உறுப்பின ர்களுக்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஒழுக்க நெறிகளை பின்பற்றுகின்ற காரணத்தி னால் அவர்களது கௌரவம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாதுகாக்கப்ப ட்டதாக தெரியப்படுத்திய ஜனாதிபதி, புதிய யுத்த தந்திரோபாயங்கள் மற்றும் தொழில்நுட்ப முறைமைகளுடாக முன்னேறுவதற்கு இத்தகைய போர்ப்ப யிற்சிகள் மிகவும் அவசியமெனக் குறிப்பிட்டுள்ளார்.

'கடல்காகம் 2017' போர்ப்பயிற்சியில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் வெளிநாட்டு இராணுவ முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து பதவி அணியினருக்கும் அந்த நாடுகளுக்கும் ஜனாதிபதி  நன்றி களை தெரிவித்துள்ளார்.