நீர்க்காகம் பயிற்சி -7-2017 முடிவை காண்பதற்காக - ஜனாதிபதி !
சிறிலங்காவின் முப்படைகள் ஒன்றி ணைந்து திருகோணமலை குச்சவெ ளிக் கடற்பரப்பில் நீர்க்காகம் பயிற்சி -7-2017 என்ற போர்ப்பயிற்சி முடிவை சிறிலங்கா ஆட்சியாளர் காண்பத ற்காக சிறிலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வுக்கு அழைப்பை வழங்கியதை யடுத்து நேரில் சென்று காணவு ள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் இக் கூட்டுப் பயிற்சியை காண வுள்ளனர்.
13 நாடுகளைச் சேர்ந்த 69 படையினர் மேலும் அதிகாரிகளும் இக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ஆம் நாள் மின்னேரியாவில் ஆரம்பமாகிய இக் கூட்டுப் பயிற்சி, வரும் 24ஆம் நாள் வரை நடைபெறவு ள்ளது குறிப்பிடத்தக்கது.