கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்த – முதலமைச்சர் !
சமஷ்டி முறையான அதிகாரப் பகிர்வு ஆனது பிரிவினைவாதம் என்ற மன நிலையிலேயே அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர்கள் எண்ணுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைத் தனி யாகச் சந்தித்து மனம்விட்டுக் கலந்து ரையாடிய வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அச்சந்திப்பில் திருப்தியடைந்ததாக குறிப்பி ட்டிருந்தார். நேற்று மாலை அஸ்கிரிய பீட மகாநாயக்கரை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியாக அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்திக்கச் சென்ற வடமாகாண முதலமைச்சரை, அஸ்கிரிய பீடத்தின் 12 தேரர்கள் கல ந்தே சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்புத் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர்,
“கண்டி அஸ்கிரிய பீடத்தின் தேரர்களை நல்லெண்ண நாம் அடிப்படையில் சந்தித்துக் கலந்துரையாடி யுள்ளோம்.
நேற்று முன்தினம் நாம் மல்வத்த மாநாயக்க தேரரைச் சந்தித்தபோது அவர் என்னுடன் தனிப்பட்ட பேச்சுக்களைக் தொடுத்தார் மிகவும் புரிந்துணர்வு ரீதி யில் சிறந்த பேச்சுவார்த்தையாக வாய்ப்பளித்தது. ஆனால் அஸ்கிரிய பீட தேரருடன் சந்திப்பானது சற்று மாறுபட்ட சங்கடத்துக்குரிய வகையில் மேற்கொள்ளப்பட்டது.
அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை முன்வைக்கவே எதிர்பாா்த்தேன். ஆனால் இந்த சந்திப்பில் மாநாயக்க தேரருடன் மேலும் 12 தேரர்களும் இணைந்து கொண்டு அவர்களின் பிரித் பிரார்த்தனைகளின் பின்னரே என்னுடன் பேச்சைத் தொடுத்தனர்.
ஏற்கனவே அவர்கள் இருந்த நிலைப்பாட்டில் இருந்தே என்னுடன் பேச்சுக்கு வந்தார்களே தவிர எனது நிலைப்பாட்டை முழுமையாக செவி சாய்த்து கேட்கும் நிலைப்பாட்டிலில்லை என்பதை அறிந்துகொண்டேன். .
இவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்து என்னுடன் பேச்சைத் தொடுத்தார்கள் என்பதை விளங்கிக் கொண்டேன்.
ஆனாலும் எனது தரப்பின் விடயங்களை முன்வைத்தேன்.
குறிப்பாக எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள போராடுவது குறித்தும், எம்மிடம் பிரிவினைவாதம் , மதவாதம், இனவாத கொள்கைகள் இல்லை என்பதையும் எடுத்துரைத்தேன்.
எமது பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு மட்டுமே சாதகமாக அமையும். அரசியல் தீர்வு குறித்து நாம் மிகவும் ஆழமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையான மக்களாக காணப்படுகின்றனர்.
எமது சுய கௌரவம், அடையாளத்தை பாதுகாக்க நாம் எத்தனிக்கின்றோம். சிங்கள மேலாதிக்கம் எம்மத்தியில் தாண்டவம் ஆடக்கூடாதென்பதைத் தெரியப்படுத்தியுள்ளேன்.
அதேபோல் அரசியலமைப்பு விடயத்தில் இவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன. நாடு பிரியும் வகையில் அல்லது ஒருசிலரது தேவைக்காக புதிய அரசியலமைப்பு இணைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மாறுபட்ட கருத்தில் இவர்கள் இருப்பதால் எமது தரப்பு நியாயங்களை நாம் முன்வைக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
எனினும் இவர்கள் கூறும் அனைத்தையும் எம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஒருசில விடயங்களிற்கு எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியும்.
வடக்கு மற்றும் தமிழர்கள் விடயத்திலும் சமஷ்டி விடயத்திலும் இவர்களின் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும். இந்த பேச்சு முன்னெடுக்கப்பட்டமையை மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக நாம் எண்ணுகின்றோம்.
இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இவர்க ளின் தலையீடுகள் மற்றும் நடுநிலைத்தன்மை கிடைக்குமென நம்பு கின்றோம். சிறந்த மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.