Breaking News

இரும்புக் கூட்டில் வடக்கு தமிழ்மக்களை அடைக்காதீர்கள் – சிறிதரன்!

மந்திகளை அடைக்கும் இரும்புக் கூட்டில் வடக்கின் தமிழ்மக்களை அடைக்கவேண்டாமென நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று முன்தினம் உற்பத்தி வரிகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கட்ட ளைகள் மீதான விவாதத்தில் உரை யாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பேச்சைத் தொடுத்தபோது சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடி யேற்ற அமைச்சருடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தான் தனது கடமையைச் சரிவரச் செய்துள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டபோது, ஐயா ‘கடமையைச் செய்யுங்கள், பலனை எதிர்பாராதீர்கள் என சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகளின் விசாரணைகள் விரைவில் தொடருமென அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிடுகையில், ஐயா, கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும் என சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திடீரென அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் பொருத்து வீட்டி னை வழங்கினால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுத்து ள்ளார்கள் எனக் குறிப்பிட்டபோது, இடையே குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இது பொருத்துவீடுகள் அல்ல இரும்புக் கூடுகள். வடக்கில் யாரும் இரும்புக் கூடுகளில் வாழ்வதில்லை. 

நாய், பூனை, கிளி, குரங்குகள் போன்றவைகளைத்தான் இரும்புக் கூடுகளில் அடைத்து வைத்திருப்பார்கள் என்றார். இதற்கு அமைச்சர் சுவாமிநாதன் பதில் கூற முற்பட்டவேளை சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்துள்ளார்.