வெகு விரைவில் புதுயுகம் ஒன்று மலரும் - பசில்
நாட்டில் வெகு சீக்கிரத்தில் புதுயுகம் ஒன்று மலரும் என எதிர்பார்த்துள்ளதாக பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் தமது அரசாங்கத்தின் ஆட்சியில் மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவித்து பணம் தேடும் வழிகளை அடையாளப்படுத்தி கொடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.