பெற்றோல், டீசல் விலைகளை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்க ஐ.ஓ.சி. தீர்மானம்
ஒக்டோபர் மாதத்தில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்படவுள்ள விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அதன் நிர்வாக இயக்குனர் ஷியாம் போரா தெரிவித்துள்ளார்.
எனினும் எரிபொருள் தொடர்பில் வரி குறைப்போ அல்லது விலை அதிகரிப்போ மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் தற்போதைய விலைக்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தின் போது தமக்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷியாம் சுட்டிக்காட்டியுள்ளார்.