பாதுகாப்பு படையினரையோ முகாம்களையோ அகற்ற முடியாது - பாதுகாப்பு அமைச்சர்
வட மாகாண முதலமைச்சர் சி;.வி. விக்னேஸ்வரன் வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வெளியிடாலும் கவனத்தில் கொள்ளப்போ வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்