வவுனியாவில் கோடாரியால் கொத்திக் கொலை - குடும்பஸ்தர் பலி
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் கொத்திக் கொல்லப்பட்டுள்ளார். இச்ச ம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதி யில் 36 வயதுடைய பாலையா சுதா கரன் என்பவரே கொல்லப்பட்டு ள்ளார்.
மேலும் தெரியவருவது
வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பத் தகாராறு கணவன், மனைவிக்கிடையில் முரண்பாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்ற நிலையில் விவாகரத்து வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கணவனான சுதாகரன் இரு பிள்ளைகளுடன் தனது வீட்டிலும் அந்த வீட்டின் அருகே உள்ள அடுத்த வீட்டில் மனைவி தனது தாய், தந்தை மற்றும் தனது பிள்ளை ஒருவருடனும் வாழ்ந்து கொண்டிருந்துள்ளார்.
நேற்று மதியம் அளவில் அருகருகே வசித்து வந்த இவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மரணமடைந்த நபரான கணவனுக்கும், மனைவி மற்றும் மனைவியின் தந்தை, சகோதரர்களுக்கு இடையிலும் தகராறு இடம்பெற்றுள்ளது.
இவ்வேளை கணவரை மனைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி கோடரியால் கொத்தியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் மரண மடைந்து விட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா நீதிமன்ற பதில் நீதவான் தயாபரன் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஓமந்தைப் பொலிசாருக்கு பணித்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஓமந்தைப் பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் என நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.