Breaking News

டெல்லி தனியார் பள்ளியில் நேற்றைய தினம் 2-ம் வகுப்பு மாணவன் கொலை !

புதுடெல்லியின் குர்கான் பகுதியி லுள்ள தனியார் பாடசாலையில் இர ண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ள்ளான் இச் சம்பவத்தின் சந்தேக த்தின் பெயரில் அப்பள்ளியின் பேரூ ந்து நடத்துனரை காவல் துறையினர் கைதாக்கியுள்ளனர். 

புதுடெல்லியின் குர்கான் பகுதியில் ஒரு பிரபல தனியார் பள்ளி பயின்று வந்த இச்சிறுவனை கழிவறையில் இரண்டாம் வகுப்பு படித்துவரும் ஏழு வயது மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் நேற்று(8) காலை மணிக்கு  இறந்துள்ளார்.

அருகில் ரத்தக்கறையுடன்  கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.  இசம் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். 

கோபமடைந்தவர்கள் பாடசாலையிலுள்ள ஜன்னல், கண்ணாடிகளையும் உடைத்தனர். இதையடுத்து காவல் துறை அவர்களை சமாதானப்படுத்தி, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையின் அடிப்படையில் அப்பள்ளியில் பணியாற்றிவரும் ஒரு பேரூந்து நடத்துனரை காவல் துறை கைது செய்தததுடன் அந்த நபர் தான் அச் சிறுவனை கொலை செய்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நபர் சிறுவனை கொலை செய்வதற்கு முன் ஓரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார் எனவும் காவல் துறை கூறினர். ஏழு வயது சிறுவன் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் தூண்டியுள்ளது.