“எளிய“ புதிய அமைப்பை நகர்த்த திட்டம் கோத்தபாய ராஜபக்ஷ !
கடந்தகால பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் “எளிய” (வெளிச்சம்) புதிய அமைப்பொன்று நாளை உதயமாகின்றது. புதிய அரசியல் அமைப்பின் சவா ல்கள் மற்றும் அச்சுறுத்தல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த அமை ப்பின் முதல் சந்திப்பு நாளை பொரலஸ்கமுவையில் இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணியின் பலர் இந் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாற்றபட்டு வரும் நிலையில் “எளிய” எனும் பெயரில் புதிய அமைப்பொன்றை செயற்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய ராஜபக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்வேறு அரசியல் மற்றும் சிவில் பிரமுகர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொரலஸ்கமுவை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
இது அவரது அடுத்தகட்ட நகர்வாக அரசியலில் தன்னை இணைத்துக்கொள்ளும் ஆரம்ப நகர்வாகும் அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதபோன்று சகல இலங்கை பிரஜைகளினதும் எதிர்பார்ப்புகளை ஒளியேற்றும் நோக்கத்தில் ஏற்றப்படும் தீபம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.