வித்தியா கொலை, விஜயகலாவை பதவி விலக - நாமல் நிபந்தனை (காணொளி)
சிறுவர் விவகார இராஜாங்க அமை ச்சர் விஜயகலா மகேஸ்வரன் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடை யவர் என்ப தால் பதவியில் இருந்து விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் மூத்த புதல்வரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார், மக்களிடமிருந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே காப்பாற்றியதாக நீதிமன்றத்தில் வாக்களித்திருந்தமையால் சிறுவர் இராஜாங்க அமைச்சர் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது துரோகத்தனமானதென நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக பதவியில் இருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.