இடைக்கால அறிக்கைக்கு முரணாக எவரும் செயற்படாதீர்கள் – சம்பந்தன் எச்சரிக்கை!
இடை க்கால அறிக்கைக்கு முரணாக விமர்சனங்கள் செய்ய வேண்டாமெ ன தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரு மான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் வழங்கியபோது, கடந்த மூன்று மாத ங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக எவரையும் கருத்துக் கூறக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுதல் கோரியதாகவும், தற்போது இடைக்கால அறிக்கைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க வேண்டாமென அன்புக் கட்டளையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இடைக்கால அறிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திர மல்லாது வட-கிழக்கு மாகாணசபைகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை யும் இடைக்கால அறிக்கைக்கு எதிராக கருத்திட வேண்டாமென இரா. சம்பந்தன் தடுத்துள்ளார்.
இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்படு வதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாதெனவும் சம்பந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் முதலாவது கூட்டம் மன்னாரில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மனு அனுப்பியு ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.