Breaking News

பிரபல எழுத்தாளர் அருன் சாது நோயின் காரணமாக இன்று காலமாகி விட்டார் !

சிறந்த பத்திரிக்கையாளராகவும், பிர பல எழுத்தாளராகவும் செயற்பட்ட அ ருன் சாது (76) இதயநோயினால் மரு த்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இன்று காலை  காலமானார். 

கடந்த 1942-ம் ஆண்டில் பிறந்த அருன் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கை களில் பணி புரிந்தவர். புனே பல்கலை க்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறமையாகச் செயலாற்றியவர். இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்த கங்களை அருன் சாது எழுதியுள்ளார். குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் தொடர்பான புத்தகங்கள் இன்றும் பிரபலமாக அமைந்துள்ளது.

பாரதிய பாஷா பரிஷாத், கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே ஆகிய விருது களையும் அருன் சாது பெற்றுள்ளார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருன் சாது தனது திறமையை வெளிப்படுத்தியவர். 

இவருக்கு எமது இணையம் சார்ந்த இதய அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கி ன்றோம்.