Breaking News

மகளுக்கு சூடு வைத்த காரணத்தால் தாய்க்கு கிடைத்த தண்டனை !

7வயது சிறுமி மோதிரமொன்றை தொ லைந்தமைக்காக தாயார் தனது மக ளுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் தா யொருவரை கைது செய்து விளக்க மறியலில் 20ம் திகதி வரை வைக்கு மாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 26 வயது தாயான அமீர் றீமா கட ந்த சனிக்கிழமை அவரது மகளுக்கு சூடு வைத்துள்ளார். மத்ரசாவுக்கு அல்கு ர்ஆன் ஓதல் பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்த சிறுமி வீடு திரும்பிய போது அணிந்திருந்த தங்க மோதிரம் இல்லாதிருப்பதைக் கண்ட அவர், சிறுமிக்கு நெஞ்சு, கால், கைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கரண்டியால் சூடு வைத்து ள்ளார். 

சிறுமியின் அழு குரல் கேட்ட அயலவர்கள் ஏறாவூர் பொலிஸாருக்கு அறி வித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தாயைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொள்கி ன்றனர்.