Breaking News

நல்லூரில் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன் ரயர் எரிப்பு !

நல்லூர் பின் வீதியில் வீற்றிருக்கும் தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு முன் இனந்தெரியாத நபர்களினால் ரயர் தீ மூட்டப்பட்ட  சம்பவம் நேற்றி ரவு நடைபெற்றுள்ளது. குறித்த அட்டூ ழியர் ரயரை பற்ற வைத்துவிட்டு மறைவாகியுள்ளனர். 

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவு தூபி தமிழீழ விடு தலை புலிகளால் அமைக்கப்பட்டு பின்னர் ஸ்ரீலங்கா அரச படைகளாலும் ஏனைய குழுக்களாலும் சேதமாக்கப்பட்ட நிலையில் 30 ஆண்டு நினைவு தின த்தை முன்னிட்டு தற்போது அலங்கரிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் கவர்ச்சிகரமாக விளங்கியது.

இவ்வாறா தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 30 ஆண்டு நினைவு வைபவம் பல்வேறு கட்சிகளின் ஏற்பாட்டில்  நினைவு தூபிக்கு முன்னால் நடைபெறும் நிலையில் எரிப்புச் சம்பவம் இடம்பெற்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும். 
உயிர் நீத்தவர்களை நினைவு கூருவது குற்றமா ?..... கல்லறைகளை உடைப்பதும் எாிப்பதும் தொடர்வதுதான் நியதியா ?.... அகிம்சைப் போர்வீரன் கண்மூடினான் தன்னை மெழுகாய் உருக்கி எங்கள் உரிமையைத் தா என்றுதானே கேட்டான். யாரையும் துன்புறுத்தி எரித்துவிட்டுச் செல்ல வில்லை. எங்கள் திலீபன்.