Breaking News

லலித் வீரதுங்க நிரபராதி என - லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன !

வெள்ளை சீலைத் துணி விவகாரத்தி ல் சிறை தண்டனை அனுபவிக்கின்ற முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க எதுவித குற்றங்க ளையும் செய்யவில்லையென ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறு ப்பினரும், அமைச்சருமான லக்ஸ்ம ன் யாப்பா அபேவர்தன தெரிவித்து ள்ளார். 

லலித் வீரதுங்கவிற்காக குரல்கொடு த்துவரும் மகாநாயக்கத் தேரர்கள் உள்ளி ட்ட தலைமை பெற்ற பிக்குகளை அநாவசியமான முறையில் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.   

சீத்தை துணி விவகாரத்தில் சிறையிலிருக்கும் இருவரை விடுவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் தலைமை யில் நிதியமொன்றை மகாநாயகர்கள் உட்பட மூன்று பிரதான பௌத்த பீட ங்கள் இணைந்துள்ளனர். 

இதற்கெதிராக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனா ரத்ன நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது, தேர ர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்துள்ளனர்.

 கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான லக்ஸ்ம ன் யாப்பா அபேவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாயக தேர்களை விமர்சிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இச் செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளது. 

மாநாயக தேரர்களை விமர்சிப்பது அவர்களை அவமதிக்கும் செயற்பாடாகும். மாநாயக தேர்களை அவமதிப்பதன் மூலமாக இந் நாட்டின் பாரம்பரியம், கொள்கைகள் மற்றும் பௌத்தத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் உள்ளது. 

சகல கட்சிகளும் உடனடியாக இச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடாகும். தற்போது லிலித் வீரதுங்க மீதான விமர்சனங்கள் பலமடைந்து காணப்படுகின்றது.  

ஆனால் என்னை பொறுத்தவரையில் லலித் வீரதுங்க களவு செய்யவில்லை. அவர் அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை. மக்கள் மூலமாக வழ ங்கிய நன்கொடையை பகிர்ந்தளிக்க அவருக்கு வழங்கப்பட்ட கட்டளையை செயற்படுத்தியுள்ளார். 

ஆனால் அவர் வழங்கிய காலம் தான் தவறான காலமாக மாறிவிட்டது. தேர்தல் காலத்தில் அவற்றை கொடுக்க முயற்சித்தமையே பிரச்சினை ஆக அமைந்துள்ளது.  

ஆகவே காலமே சதி செய்துள்ளதென்பது எனது கருத்தாகும். எனினும் தற்போது நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனை விமர்சிக்க முடியாதென மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்றார்.