ஐ.நாவின் அறிக்கையாளர் பப்லோ டி.கிரெய்ப் இலங்கை வருகிறார் !
நிலவரங்களை மேம்படுத்தல், நீதி, இழப்பீடு ஆகியன மீள நிகழாமையை நேரில் பார்த்து உறுதி செய்வதற்காக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி.கிரெய்ப் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் பயணிக்கவுள்ளார். ஜெனி வாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 36 ஆவது கூட்டத் தொடரின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாகவும், எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை அங்கு உத்தியோகபூர்வ பயணத்தை தொடரவிருப்பதாக குறிப்பி ட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவது இவரது செயற்பாடாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.