Breaking News

யாழ்-சாவகச்சேரியில் வாள்வெட்டு மூவர் காயம் !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி  கிராம்பு வில் பகுதியில் வீடு ஒன்றில் நேற்றி ரவு 8:40 மணியளவிலும் நுழைந்ததி ருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் அடை ந்துள்ளனர். வீட்டினுள் திருடர்கள் புகு ந்ததை அவதானித்த வீட்டின் உரிமை யாளர் திருடன், திருடன் என குரல்யெ ழுப்பியதில் அயல்வீட்டினர் விரைந்து வந்துள்ளனர்.

இவ்வேளையில் ஓடி வந்த அயல் வீட்டுக்காரர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பரமேஸ்வரன் சுஜிவன், 27 வயதான பரமேஸ்வரன் சுஜித்தா, 30 வயதான ஜெயரத்தினம் சிறிராஜ், ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பரமேஸ்வரன் சுஜித்தா மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.