Breaking News

யாழிலுள்ள இராணுவத்தினரை கோட்டைக்கு நகர்த்த மைத்திரிக்கு றெஜினோல்ட் கூரே ஆலோசனை!

யாழ் மண்ணில் மக்களின் வாழ்விட ங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் இரா ணுவத்தினரையும், சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் இராணுவத்தினரையும் யாழ். கோ ட்டைக்கு இடமாற்றினால் பொது மக்களின் வாழ்விடங்களை பொது மக்களிடம் கையாளிக்கலாமென சிறி லங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று வவுனியா மாவட்டத்திலுள்ள விகாராதிபதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இக்கருத்தை வெளியிட்டுள்ளதுடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு மடல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தொடர்கையில், யாழ்ப்பாணக் கோட்டையில் 45 ஏக்கர் நிலப்பரப்புகள் உள்ளதாகவும் முன்னைய காலத்தில் போர்த்துக்கேயர் முகாமிட்டிருந்தனர். அதன்பின் ஆங்கிலேயர் வாழ்ந்தனர். இறுதியாக எமது இராணுவத்தினர் தங்கியிருந்ததாகவும் கோட்டையிலிருந்து எமது இராணுவத்தினர் வெளி யேறியதால் தற்போது வெறுமையாகவே உள்ளதுடன் இக்கோட்டை யாழ்ப்பாண நகரின் மத்தியில் இருப்பதால் யாழ். கோட்டையென அழை க்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணத்திலிருக்கும் சிங்கள மகா வித்தியாலய இராணுவத்தினரை அகற்றி கோட்டையில் அமர்த்தலாமென்ற எனது அபிப்பிராயத்தை ஆட்சி யாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். 

அத்துடன் சட்டரீதியான உரிமையுடன் இராணுவத்தினரை கோட்டைக்கு நகர்த்தலாமென தெரிவித்துள்ளார்.