தமிழக மீனவர்களில் 80 போ் விடுதலை ! காணொளி இணைப்பு
இந்தியா - தமிழகத்தை சேர்ந்த 80 மீன வர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நேற்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பர ப்பில் அத்துமீறி பிரவேசித்து கட ற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சா ட்டில் கைது செய்யப்பட்ட 76 மீனவ ர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 80 மீனவர்கள் விடுதலையாகியுள்ளனர். விடுவிக்க ப்பட்ட மீனவர்களுடன் அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 4 இந்திய மீனவர்களுமாக 80 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் கையளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.