ஆக்கிரமிப்பு வடக்கிலிருந்து நகர்வதால் இராணுவத்தை அகற்றப்போவதில்லை!
இலங்கை வரலாற்றில், நாடுகளுக்கி டையிலான யுத்தத்தைத் தவிர நடை பெற்ற ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் வடக்கிலிருந்தே நாட்டுக்குள் வருவ தால் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக்கூடாதென கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பின்பல இக் கருத்தை குறிப்பி ட்டுள்ளார்.
தொடர்ந்தும் நாட்டுக்குள் எடுத்து வரப்படும் சட்டவிரோதப் பொருட்கள் அனைத்தும் வடக்கிலிருந்தே நாட்டுக்குள்கொண்டு வரப்படுகின்றன.
அத்து டன், இறுதிக் கட்ட யுத்தத்தின்பின் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரம் விடுதலைப் புலிகளும் வடக்கிலேயே வாழ்கின்றனர்.
இவ்வாறான நெருக்கடிக்கள் உள்ளதினால் வடக்கில் இராணுவத்தினரை நிலையாக வைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து தெற்கில் இராணுவத்தை அதிகரிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதென்பது நிதியை அதிகரிப்பது அல்ல. மாறாக பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இராணுவத்தை பலவீனப்படுத்தியுள்ளது.
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் 12 ஆயிரம் விதலைப்புலிகள் மீதும் வழக்குத் தொடராது அரசாங்கம் பாதுகாத்து வருவதா சூளுரைத்துள்ளார்.