வைகோவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !
தமிழ் அமைப்புக்களின் நிபந்தனை களை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு வழங்க ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனமாகியுள்ளதாக தெரிவிக்கப்ப டுகின்றது.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வை கோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவே ற்றப்பட்டதை நிரூபித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையக உறுப்பினர் நாடு கள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழீழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டுமென எச்சரித்துள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து எச்சரித்ததுடன் அவருடன் சேர்ந்து வந்த சிங்களர்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டு வாக்குவாதத்தப்பட்டதுடன் வைகோவை தாக்க எத்தனித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உண்டென வைகோ வாதாடி எதிர்ந்து நின்றுள்ளார். பிரச்சினை பெரிதாக அமைந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாது காப்பாக வெளியே நகர்த்தியுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியில் உண்ணாவிரதம் போராட்டம். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை தான் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றது.
2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்காவும் மைத்ரிபாலா சிறிசேனாவும் கூறுகின்றார்கள். மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக சிறிலங்கா வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்தினேன்.
இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களவர்களே தகராறில் முற்பட்டுள்ளனர்.
நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் கொடுத்தேன் ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் எனத் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற தற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளன ர்.
வைகோவிற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக தமிழ் அமைப்பினர் சார்பில் நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.
இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காகவே ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனமாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.