பங்குதாரர்களாயினும், தமிழ்மக்களின் அநீதிக்கெதிராக குரல்கொடுப்பேன் – மனோகணேசன்!
தமிழ் முற்பாங்கு கூட்டணி அரசின் பங்குதாரராக இருந்தாலும் தமிழ்மக்க ளுக்கெதிராக தொடுக்கப்படும் அநீதிக ளுக்கெதிராக மென்மேலும் குரல் வழ ங்குவேன் என அக்கட்சி தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டதுடன்,
தமிழ் முற்போக்குக் கூட்டணியானது வட-கிழக்குக்கு வெளியே வாழும் தமி ழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகவே காணப்படுகின்றது எ ன்றார். தங்களது அபிலாசைகளையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி ய கடப்பாட்டையும் கொண்டதாக அமைந்துள்ளது.
நாம் அரசில் பங்குதாரர்க ளாக செயற்பட்டாலும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கெ திராக தொடர்ந்தும் குரலெழுப்பி வருவோமெனக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண தேர்தல் திருத்தச் சட்டவரைபின்போது 50 சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தையும் 50 சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் இணைத்தமைத்த கலப்பு தேர்தல் முறையொன்றை அமைக்க வேண்டுமென்ப தில் உறுதியாகவுள்ளோமெனக் குறிப்பிட்டுள்ளார்.
வட-கிழக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கி இதனை எட்டி யிருந்தோம்.
வட-கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். அவ ர்களின் பிரச்சனைக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் பின்னிற்க ப்போவதில்லை.
அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்களின் முன்னகர்தலுக்கு எம்மலான சக உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில் பின்னி ற்கப்போவதில்லையென பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.