மாகாண சபையை கலைத்தாலும் உரிமைகளைப் பெறும் இலட்சியத்தை கைவிடோம்.
மாகாண சபை துரத்தப்பட்டாலும் சிறு பான்மைச் சமூகங்களுக்கான அரசி யல் உரிமைகளையும் அபிவிருத்திக ளையும் பெற்றுக் கொள்ளும் எமது இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின்னடையோமென கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் குறி ப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் செயற்பாடுகளில் மாகாணசபை கலைப்பு தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்படுவது குறித்து கலந்து ரையாடுகையில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மாகாண சபை கலைக்கப்படப்போகிறதாக பீரங்கிப் பிரச்சாரத்தில் கலந்து ள்ளனர்.
மாகாண சபை ஆட்சி என்றொ ஒருநாள் கலைக்கப்பட உள்ளதை இவர்கள் சொல்லித்தான் மக்கள் அறிந்து தெரிந்துகொள்ள வேண்டுமில்லை.
அரசியலமைப்பின்படி எப்பவும் மாகாண சபையும், நாடாளுமன்றமும், உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்படலாமெனவும், இது ஒரு புதினமான செயற்பாடோ அல்லது முரசுதட்டி தெரியப்படுத்த வேண்டிய தகவலோ அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் பாமர மக்களிடத்தில் சென்று ஆர்ப்பரிப்பது வெட்கக் கேடு எனவும் சின்னத்தனமான அரசியல்வாதிகள் சிலர் எதை, எங்கு, எப்படிப் பேசுவதெனத் புரியாமல் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உணர்ச்சி வசப்படும்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மக்களை உசு ப்பேற்றி விடுகிறார்கள்.
அதன் விளைவுகளைக் கொண்டு எதிர்கால தேர்தலில் வெற்றி பெறலாமென்றது அவர்களது குறிக்கோள்.
குறைமதி கிறுக்கர்களான இத்தகைய அரசியல்வாதிகள், சிறுபான்மையின ருக்கான அரசியல் விடிவு என்ன? அதனை அடைந்து கொள்வதற்கான வியூகங்களை எப்படி வகுக்க வேண்டும், சமூக மக்களை ஒற்றுமைப்படுத்தி எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவுகளே இல்லாமல் கொக்கரிப்பதால் நாமும் சிறுபான்மையினம் என்ற வகையில் தலைகுனிய வேண்டியுள்ளது.
நல்லதோ கெட்டதோ மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். அதுதான் ஒரு சிறந்த மனிதப் பண்பு. அற்ப அரசியலுக்காக அழுக்கை உண்டு வாழக் கூடாது.
20வது அரசியல் திருத்தம் என்றாலே என்னவென்று தெரியா மல் மக்களிடம் பேசித் திரியும் குறையறிவு அரசியல்வாதிகளை குறை கூறக் கூடாது.
இது பற்றி நாம் கணக்கெடுப்பதில்லை என்றாலும் மக்களுக்கு சிறந்த அரசிய ல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் தேவை தொடர்பாக வலியுறுத்த வேண்டியுள்ளது.
யாரோ இருட்டில் வெட்டிப் போட்ட படுகுழியில் இவர்கள் பகலில் வெட்ட வெளிச்சத்தில் போய் விழுகின் மாகாண ஆட்சி நீடித்தாலும், கலைக்கப்பட்டா லும் நாம், பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சார்பாக அவர்களது அரசியல் அதிகார உரிமைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
மேலும் சிறுபான்மைச் சமூகங்களின் ஒன்றுபட்ட அரசியல் விடுதலைக்காக நாம் குரலெழுப்புவதை இச் சோரம்போகும் குறைமதி அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்திவிட முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.