Breaking News

அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீது நம்பிக்கையில்லை – முதலமைச்சர்!

வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முகாம்களையும்அகற்றுவதற்கு தமிழ் மக்கள் மீது அரசாங்கத்திற்கு நம்பி க்கையில்லையென்பதை நிரூபிக்கி ன்றது. என வடமாகாண முதலமை ச்சா் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பி ட்டுள்ளார்.

கண்டியில் மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடும்போது வடக்கில் இராணு வத்தினர் நிலையாயிருப்பது அச்சுறு த்தல் என்பது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது வடக்கில் இராணுவப் பிர சன்னம் தேவையில்லை. 2009ஆம் அண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ். குடா நாடு உட்பட வடக்கிலிருந்து குறிப்பிடப்பட்ட அளவிலும் இராணு வப் பிரச்சனம் குறைக்கப்பட்டதாக இல்லை. 

வடமாகாணத்தில் இன்றும் 60,000ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பு இராணுவத்தினர் வசமுள்ளது. இதுவரை 5,000 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் எத்தனை பிரிகேட் படையினர் நிலை கொள்ள முடியும் என்று முடிவு செய்யும் அல்லது பரிந்துரைக்கும் வேலை என்னுடையது அல்ல. 

காவல்துறையினரது பிரசன்னத்தை அதிகரித்துக்கொண்டு இராணுவப் பிரசன்னத்தை அரசாங்கத்தினால் குறைக்கமுடியும். சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் தேவையிருந்தால் காவல்துறையின் பிரசன்னத்தை இரண்டு மடங்கா க்கலாம்.  

தற்போது இராணுவத் தளபதியாக இருக்கும் மகேஸ் சேனநாயக்கவை யாழ். கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டிருந்த நேரம் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பது தொடர்பாகப் பேசியிருந்தேன். 

வடக்கில் இராணுவத்தினரின் இருப்பானது, நல்லிணக்க செயல்முறைகளுக்கு தடையாக உள்ளதுடன் தமிழ் மக்களுக்கு தடைவிலக்காக உள்ளது.  வடக்கில் இராணுவத் தளங்களை மூட மறுப்பதானது, தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லையென்பதையே சுட்டிநிற்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.