Breaking News

பதவி நீக்கத்தால் தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை !

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளளிக்க மீண்டும் தமிழரசுக் கட்சி முயற்சித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ ரசுக் கட்சியைச் சேர்ந்த சத்தியலி ங்கம், குருகுலராஜா மற்றும் டெனீ ஸ்வரன் ஆகியோரை ஊழல் குற்ற ச்சாட்டின் நிமித்தம் பதவி நீக்கியதால் ஆத்திரமடைந்த தமிழரசுக் கட்சி வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் செலு த்தியுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் பங்காளிக் கட்சிகள் வன்மையாக கண்டித்து, சி.வி.விக்னேஸ்வரனே தொடர்ந்தும் வடமாகாண முதலமைச்சராக இருக்க வேண்டுமென கோரிக்கை விடு த்துள்ளனர்.  

மேலும் வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேர ணைக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர் அணிகள் போராட்டம் தொடுத்ததையடுத்து நம்பி க்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்பட்டது. 

வடமாகாண சபையின் ஆளும் கட்சியான இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணைந்து மீண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை எடு த்துவரும் முயற்சியில் செயற்பட்டுள்ளனர். 

இதனால் மேலும் கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், மீண்டும் முத லமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், மீண்டும் அப் பிரேரணை தோற்கடிக்கப்படும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு முதலமைச்சருக்கு உண்டென்றும், முதலமைச்சருக்கு முரணாக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளும் தோற்க டிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.