மாவீரா்களுக்கு விளக்கேற்ற எம் பணிகளைத் தொடர்வோம் - ஜனநாயக போராளிகள் கட்சி
மாவீரர்களை நினைவு கூறுவதற்காக சகல ஏற்பாடுகளையும் மேற்கொ ள்வோமென ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவரும் மட்டு அம்பாறை மாவட்ட பிராந்திய இணை ப்பாளருமான கே. பிரபாகரன் தெரி வித்துள்ளார்.
இன்றையதினம் மட்டக்களப்பு கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல முதலாம் கட்ட சிரமதானம் பணியின் பின்னரான செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
எமது சமூகம், புலம்பெயர் சமூகம் இன்னமும் நித்திரையில் இருந்து எழும்பாதுள்ளனா. போராளிகள், மாவீரர் குடும்பங்களும் வீரச்சாவினை அணைத்துக்கொண்ட நாளை நினைவு கொள்ளும் நடவடிக்கையில் செய ற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பில் எமது சமூ கத்தினரும், புலம்பெயர் சமூகத்தின ரும் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் எனவே புலம்பெயர் சமூகத்தினர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என கே. பிரபாகரன் குறிப்பிட்டு ள்ளார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு துயிலு மில்ல சிரமதானப் பணியில் ஈடுபட்டு ள்ளோம்.
அதேபோல் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள மூன்று துயிலுமில்லங்கள் துப்பரவு செய்துள்ளோம்.
மட்டு அம்பாறையில் அமைந்துள்ள நான்காம் துயிலுமில்லமான கஞ்சி குடிச்சாறு துயிலுமில்லத்தில் தற்போது முதற்கட்ட துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பணியில் மாவீரர் குடும்பத்தினர், முன்னால் போராளிகள், பொது மக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இத்தனை காலமாக செயற்படுத்தப்பட்ட சிரமதானப் பணியின் நினைவு கூறுவதற்காக வழிவகைகள் எதுவும் எமது புலம்பெயர் சமூகமோ தேசத்தில் உள்ள தொழில் அதிபர்களோ சமூகத்தினரோ உதவி புரியவில்லை.
துரதிஸ்ட வசமாக இத்தனை மாதங்கள் கடந்தும் எமது நினைவுகளை நினைவு கூறும் அளவிற்கு சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இருந்தும் இந்த வருடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லங்களை பேணி பாதுகாத்து மாவீரர்களை நினைவு கூறுவதற்காக வேண்டிய ஏற்பாடுகளையும் மேற்கொ ள்வோமென போராளிகள் கட்சியின் உப தலைவர் கே. பிரபாகரன் குறிப்பி ட்டுள்ளார்.