Breaking News

வித்தியா படுகொலை தீர்ப்பில் - விஜயகலா மீதும் குற்றச்சாட்டு !

இலங்கை முழுவதிலும் எதிர்பார்க்கப்பட்ட, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை  வழக்கு விசாரணயில் ஏழு பேர் குற்றச்சாட்டுகள் யாழ் மேல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. 

ட்ரயல் அட் பார் முறையில் இன்று புதன்கிழமை நண்பகல் நீதிபதி இளஞ்செழி யன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் 30 ஆண்டுகள் சிறைத் தன்டனையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இது இரட்டைத் தன்டனை என்பதுடன் அதேவேளை 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் வித்தயாவின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென நீதிபதிகள் குழு எச்சரித்துள்ளது. 

தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் முடிவாகியுள்ளது.  2ஆம் 3ஆம் 5ஆம் 6ஆம் எதிரி களான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஸ்யந்தன் ஆகியோர், கூட்டு பாலியல் வல்லுறுவு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளனர்

8ஆம் 9ஆம் எதிரிகளான ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீது வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, கொலை ஆகிய சதி முயற்சியில் ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டுக்கள்  நிரூபனமாகியுள்ளது. 

அதேவேளை முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வித்தியா படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவ் வழக்கு விசாரணையில் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு பல்கலைக்கழ விரிவுரையாளர் .தமிழ்மாறன் ஆகியோர் மீதும் விசாரணைகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இன்று வழக்கப்பட்ட தீர்ப்பின்போது பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நீதிபதி இளஞ்செழியன் விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கைதிகள் தப்பித்துச் செல்வதற்கு அர சியல் செல்வாக்கை உபயோகிப்பது குற்றமென நீதிபதியின் விமர்சனம் சான்றாக விளங்கியதாகவும் அதே வேளை ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை வேறொரு பகுதியாக தொடர்ந்து நடைபெற வுள்ளது. 

பொலிஸ் உப பரிசோதகர் ஸ்ரீகஜன் இது வரை கைதாகவில்லையெனவும் இதே வேளை இத் தீர்ப்பை எதிர்த்து குற்றவா ளிகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்றில் மனுத் தாக்கல் தொடுத்துள்ளதை உறவினர்கள் தெரிவித்ததாக தகவல் கசி ந்துள்ளது.


கைதிகள் கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு 07 குற்றவாளிகளும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.