Breaking News

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கையில் - கிருஷாந்தி படுகொலை 21வது நினைவு அஞ்சலி இன்று

யாழ் மண்ணில் வெள்ளைப் புறா வொன்று 1996ம் ஆண்டு செம்மணி யில் இராணுவ வல்லரசுகளின் கை யில் சிக்கியது. பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தி பாடசாலை மாண வி கிருஷாந்தி படுகொலை செய்யப்ப ட்டாள். கிருஷாந்தியை தேடிச்சென்ற உறவினரையும் இராணுவத்தினர் கொன்றழித்தனர். இவர்களுக்கும் ஒரு கணம் தலைசாயத்து அஞ்சலி செய்யும் இந்நாளான  நாளில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் கிருஷாந்தி குமாரசுவாமியை நினைவுகூர்ந்து நிகழ்வு செம்மணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இவ்வேளை வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 21 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி நினைவு பகிரப்படவுள்ளது. 

1996 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு, வீடு திரும்பிய கிருஷாந்தி குமாரசுவாமி கைதடி காவலரணில் வைத்து இராணுவத்தினரால் பலவந்தமாக கைதாக்கி ஒன்பது இராணுவத்தினரும் இரண்டு பொலிஸாரும் அடங்கலாக பதினொரு பேர் கிருஷாந்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்தது மட்டுமல்லாமல் தம்பிள்ளையைக் காணவில்லையெனத் தேடி விசாரணைக்காகச் சென்ற அவரது தாயார் இராசம்மா, சகோதரர் பிரணவன் மற்றும் அயல்வீட்டான சிதம்பரம் கிருபா மூர்த்தி ஆகியோரையும் இராணு த்தினர்  படுகொலை செய்து தாண்டவம் ஆடியது.  

இச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து இராணுவத்தின ருக்கும் பொலிஸார் ஒருவருக்கும் 1998 ஆம் ஆண்டு மரண தண்டணையும் மேலும் மூவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.