Breaking News

வடமாகாணசபை அமர்வில் சம்மந்தனிற்கு எதிராக - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரப்பிரசாதமாகக் கருதுவதாக வடமாகாண முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். 04.06.2017 நடைபெற்ற 104ஆவது வடமாகாணசபை அமர்வி லேயே முதலமைச்சர் இக்குற்ற ச்சாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக உரையாற்றிய முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் யாப்பின் 154பு (2) என்ற உறுப்புரை யின் படி 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரப்பரவல் தொடர்பான மாற்றுச் சட்டம் மேற்கொள்ளப்படாவிட்டால்,  திருத்த வரைபை ஒவ்வொரு மாகா ணசபைகளுக்கும் அவற்றின் கருத்தறிய ஜனாதிபதியானவர் அனுப்ப வேண்டு மென  திருத்தம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் ஆரம்பமாகும் முன்   நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  

இந்தத் திருத்தம் சம்பந்தமாகச் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்னுடன் சென்றமுறை கதைக்கும்போது இதையே ஒரு வரப்பிரசாதமாக கருதியிருந்தார். ஆனால் அவ்வாறு என்னால் ஏற்க முடியாதிருக்கின்றது. இந் நடவடிக்கையில் எமது மக்களே முக்கியமானவர்கள். எமது பதவிக்காலம் முடிவடைந்ததும் புதிய பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவர்க ளுக்கே உண்டு. உங்கள் சலுகைகளைக் கண்டு எமது உரிமைகளைக் கை விடும் மக்கள் பிரதிநிதிகள் நாமல்ல என்பதை வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.