அமைச்சுப் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விலக வேண்டுமென - வீரவன்ச!
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சுப் பதவியிலி ருந்து விலக வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நேற்று தெரியப்படு த்தியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகா குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே விமல் வீரவன்ச தெரியப்படுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை, அமைச்சர் பொன்சேகா மீறிவிட்டார் எனவும், விஜயதாச ராஜபக்ஷவைப் போன்றே, அமைச்சர் பொன்சேகாவும் நீக்கப்பட வேண்டுமெனவும் தெரியப்படுத்தினார்.
அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்து என வேறு யாராவது எண்ணினால், அவர்கள் மீது தவறு கூற முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
“அமைச்சர் மீது, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹம்பாந்தோ ட்டைத் துறைமுகத்தின் விற்பனை தொடர்பில் கருத்துத் தெரிவித்தமைக்காக, முன்னாள் அமைச்சர் விஜயதாச நீக்கப்பட்டார்.
தேசத்துரோகம் மிகுந்த கருத்தை வெளிப்படுத்தியமைக்காக, அமைச்சர் பொன்சேகா ஏன் நீக்கப்படக்கூடாது?” என்ற கேள்வியைத் தொடுத்துள்ளார்.
ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகாவிடம் ஆதாரங்கள் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, பொலிஸாரிடம் அவர் முறை யிட்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த விமல் வீரவன்ச, அதைவிடுத்து, முழு உலகமும் அறியும் வண்ணம், பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தி ருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்காக, முன்னர் பல இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவும், “ஜயசூரியவுக்கு எதிராக, சனல் 4 தொலை க்காட்சியும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
பொன்சேகாவின் குற்றச்சாட்டுகள், அவ்வாறான மோசமான நடவ டிக்கைகளுக்கு, ஊக்குவிப்பு வழங்கும். முறைப்பாடுகள் காணப்பட்டால், தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட நடவடிக்கை உள்ளது.
இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது, அவரது கடமையோ அல்லது பொறுப்போ கிடையாது” என, வீரவன்ச பகிரங்கமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம், சிறுபான்மைக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அவர், இராணுவத்தைத் தாக்கிக் கொண்டு, சிறுபான்மைக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை, அரசாங்கம் மேற்கொள்கின்றதெனவும் தெரிவித்துள்ளார்.