சமஷ்டி என்ற சொல்லுக்கு இடமில்லை – வெளிப்படையாக ஜனாதிபதி தெரிவிப்பு !
புதிய அரசியல் சட்டத்தில் சமஷ்டி எனும் சொல்லுக்கு இடமில்லையெ ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமய நிகழ்வொன்றில் கலந்து உரை யாற்றுகையில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அமர்வில் முன் வைக்கப்பட்டிருக்கும் சட்ட மூலத்தி ல் பௌத்த சமயத்துக்கு முக்கியத்து வம் வழங்கப்படமாட்ட தெனவும், நா ட்டைப் பிளவுபடுத்தம் நோக்கிலான விதந்துரைகள் நடைபெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் குறிப்பிட்டி ருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, குறித்த மறுப்பைத் தெளிவாக தனது விள க்கவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையில் எவ்வித மாற்றமும் அனுமதிக்கப்படாது புதிய சட்டமூலத்தில் பௌத்த சமயத்தைத் தாழ்வுபடுத்தும் வகையில் எந்தவித அம்சங்களும் இடம்பெறவில்லை என்பதை, சட்டமூலம் இயற்றும் குழுவினரிடம் ஒரு முறைக்கு இரண்டு முறைகள் தெளிவாகக் அறிந்துள்ளேன்.
தேரர்கள் அச்சும்படியான எவ்வித மாற்றமும் புதிய சட்டமூலத்தில் கொண்டு வரப்பட மாட்டாது.
“அதேபோல், ஒரே இலங்கை என்ற பண்பிலும் எவ்வித மான மாற்றமும் கொண்டுவரப்படாது. எக்காரணம் கொண்டும் இலங்கை யைத் துண்டாடும் எண்ணம் அரசிடம் இல்லை.”
என ஜனாதிபதி குறிப்பிட்டு ள்ளார்.