Breaking News

பொன்சேகாவின் கருத்து முரண்பாடே காரணம் என்கிறார் - அமைச்சர் ருவன் விஜே வர்த்தன

முன்னாள் இராணுவத் தளபதி ஜென ரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்வைத்த கருத்து,  தனிப்பட்ட முர ன்பாடே காரணம் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜே வர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

இவர்களுக்கிடையில் ஏற்பட்டிரு க்கும் தகராறு காரணமாக கருத்து வேறுபாடே முரண்பாடக உள்ளதெனவும், இதனை ஜனாதிபதி தலையீட்டில் சமரசம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதாகவும்  கூறியுள்ளார்.

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வருவதாக சரத் பொன்சேகா நேற்றையதினம் தெரிவித்திருந்தார். இவ் விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்திலேயே ருவன் விஜே வர்த்தன மேற்குறிப்பிட்டவாறு தனது  கருத்தை குறிப்பிட்டுள்ளார்.