யாழ் நீதிமன்று இன்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது !
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு பன்மடங்கில் இன்றைய தினம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில் நீதி மன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழ மைக்கு மாறாக அதிகரிக்கப்பட்டு ள்ளது.
இந்நிலையில் இவ் வழக்கில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் நீதிமன்றத்திற்குள் தற்சமயம் அழைத்துச் செல்லப்ப ட்டுள்ளனர்.
மாணவியின் தாயாரும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.