வடக்கு முதலமைச்சருக்கு எதிராக டெனீஸ்வரனின் மனு விசாரணைக்காக- நீதிமன்றம்
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவா்கள் தனது தனித்துவமான முடி வில் தனது அமைச்சுப் பதவி பறித்த தாக குற்றம் சுமத்தி வடமா காண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனால் தாக்கல் செய்ய ப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு வை விசாரணைக்கு எடுத்துக்கொ ள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானம் எடு த்துள்ளது.
டெனீஸ்வரனின் மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி உச்ச நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது.
ஊழல் மோசடி குற்ற ச்சாட்டுக்களை தொடுத்து வடமாகாண சபையின் அமைச்சர்களாக இருந்த ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலி ருந்து இராஜினாமா செய்யுமாறு கோரியிருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஏனைய அமைச்சர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோரை வலுக்கட்டாய விடுமுறையில் செல்ல கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இரு அமைச்சர்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து முதலமைச்சரைப் பதவி விலகுமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் மனுவொன்றை சமர்ப்பி த்திருந்தார்.
அதற்கு எதிராக வடக்கிலுள்ள பொது அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், ஏனைய அரசியல் கட்சிகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து இல ங்கைத் தமிழரசுக் கட்சி முதலமைச்சருக்கு எதிரான மனுவை மீளப்பெற்று க்கொண்டது.
அதேவேளை இவ் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்ட மைப்பின் தலைவர்கள், முதலமைச்சருடன் தொடுத்த கலந்துரையாடலில் முதலமைச்சர் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்க ப்பட்டது.
இதற்கமைய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே சுகாதார அமைச்சராக கடமையாற்றிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் பதவி விலகியது டன் பா.டெனீஸ்வரனின் பதவி அவரது கட்சியான டெலோவின் நிபந்தனை க்கமைவாக முதலமைச்சரினால் பறியாகியது.
முதலமைச்சரின் இத் தீர்மானம் தான்தோன்றித்தனமானது என்றும் இதனால் அவரது தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும் கோரி முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையென அவ்வதிகாரம் ஆளுநருக்கே உரித்தாகுமென முன்னாள் அமை ச்சர் டெனீஸ்வரன் தனது மனுவில் கைச்சாதிட்டிருந்தார்.
குறிப்பிட்ட மனுவை ஆராய்ந்த நிலையிலேயே உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் குறித்த மனுவை விசாரணைக்குட்படுத்த தீர்மானித்திருப்பது குறிப்பி டத்தக்கது.