Breaking News

நினைவலைகளில் நான்காம் நாளான இன்று - தியாகச் செம்மல் திலீபன்

அகிம்சைப் போரில் அண்ணன் திலீபன் உடலை உருக்கி நான்காம் நாளாக நினை வலைகளில் ஆர்ப்பரிக்கும் தியாகச் சுடர் அண்ணன் திலீபனிற்கு எமது அஞ்சலிகள் பல.....

திலீபன் அவர்கள் நோண்பிருந்த மேடை க்கு அருகாமையிலு மேடையில் பொது மக்கள், மாணவர்கள், மாணவிகள், மகளிர் குழு தலைவிகள் போராளிகள் என தொடர்ந்து திலீபனைப் பற்றியும் ஈழத்தை பற்றியும் கவிதைகள், கட்டுரைகள் என எழுச்சியாக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தார்கள் அதில் ஒரு இளம் மாண வியின் கவிதை ஈர்க்கவே தான் படித்துக் கொண்டிருந்த புத்தகங்களை மூடி வைத்துவிட்டு தன் கவனத்தை அந்த மாணவியின் பாக்கமாக திருப்பி கண்க ளில் நீர்வழிய செவி மடுத்தார்.

“அண்ணே நானும் பேசப்போறேன் மைக்கை வேண்டி தாங்கோ”என்று கேட்கின்றார் என்னது பேசப்போறியளா நான்கு நாட்கள் ஆகிவிட்டது சாப்பாடு மில்லை நீரும் அருந்தவில்லை இப்ப பேசினியள் எண்டால் நா வறண்டுவிடும் களைத்து போய்விடுவியள் வேண்டாம்.“அண்ணே கணக்க கதைக்கல்லே சுரு க்கமாக முடித்துவிடுகின்றேன் ப்ளீஸ் அண்ணே மைக்கை வேண்டி தாங்கோ”” நீண்ட யோசனைக்கு பின் “”ரெண்டே ரெண்டு நிமிடம்தான் பேசனும்”என்ற நிபந்தனையோடு மைக் திலீபனிற்காக  கொடுக்கப்படுகின்றது.

திலீபன் அண்ணா பேசத் தொடங்குகின்றார். “”எனது அன்பிற்குரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேசமுடியாத நிலையிலிருப்ப தால் இருந்தபடியே பேசுகின்றேன்.

நாளை நான் சுயநினைவோடு இருப்பேனோ தெரியாது அதனால் நான் இன்று உங்களுடன் பேச வேண்டும் என விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக உள்ளோம். 650பேர் வரையில் இன்றுவரை மரணித்துள்ளோம். மில்லர் (முதல் தரைக் கரும்புலி) இறுதியாக போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான் நான் இறுதிவரை அவனுடன் இருந்தேன்.

“நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றேன். எம் மக்கள் விடுதலையடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே என் ஒரே ஏக்கம்” “என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். 

மரணித்த 650பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள் அதனை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரிடம் நான் அனுமதி கேட்டபோது தலைவர் கூறிய வரிகள் எனக்கு நினைவில் உள்ளன.
 “திலீபா நீ முன்னால் போ நான் பின்னால் வருகின்றேன்” என்று  கூறினார். 

இத்தகைய தெளிவான ஒரு தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கின்றீர்கள் அந்த மாபெரும் வீரனின் தலைமையில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தரும். 

இதை வானத்திலிருந்து மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன். 

நான் மன ரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலையடைவார்கள் என்று உணருகின்றேன்.

மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடை பெறு கின்றேன்.

விடுதலைபப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை ,தந்தையர்களை நினைத்து அன்போடு உபசரிப்போர்.

உண்மையான உறுதியான இலட்சியம் அந்த இலட்சியத்தினை எம் தலை வருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது கடைசி ஆசையும் இதுதான்.என பேசி முடிக்கின்றார். 

 “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”