தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா. சம்மந்தன் மீது குற்றச்சாட்டு – சிவசக்தி ஆனந்தன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை வர் இரா.சம்பந்தன் தொடரும் இர ட்டைவேடம் தவிர்க்கப்பட வேண்டு மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி ன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்ற ம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மா வட்ட தண்ணீரூற்றில் சமூக சேவை யாளர்களை கௌரவிக்கப்பட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்டவாறு கருத்துரைத்துள்ளார். மேலு ம்,
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்காளிக் கட்சிகளுடன் கூட கலந்தாலோசிக்காது கிழக்கு மாகாணத்தில் அங்கம் வகி க்கும் ஒரு சில கட்சிகள் தமக்குள் முடிவெடுத்து கண் மூடித்தனமாக ஆதரவு நல்கியுள்ளனர்.
அரசாங்கத்துக்கு ஒரு ஆதரவான போக்கை எடுத்தே கிழக்கு மாகாணத்தின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடலை ஒன்றுகூடி அதன் மூலமாக எடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியுமே தவிர, ஒரு சில மனிதர்கள், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்வு மூலமாக முடிவெடுக்க முடியாது.
கடந்த இரண்டரை வருடங்களாக ஒருசில மனிதர்கள் மாத்திரம் கையாண்ட செயல்வடிவம் வெறுமனே தமிழ் மக்களை இன்று நடுத்தெருவில் தள்ளி விட்டுள்ளது.
அதனால் அரசாங்கத்துக்கு ஒருபக்கம் முண்டு கொடுத்துக்கொண்டு, இன்னொ ருபக்கம் எமது காணியை விடுகிறார்கள் இல்லை, காணாமல்போனோருக்குத் தீர்வில்லை, அபிவிருத்தியில்லையென இரட்டை வேடத்தில் கருத்து தெரி விக்க கூடாதென குற்றம் சுமத்தியுள்ளார்.