Breaking News

ராஜீவ்காந்தி கொலைக்கான வெடிகுண்டு தொடர்பாக நீதிமன்றில் விசாரணை !

ராஜீவ்காந்தி கொலைக்கான வெடி குண்டு தயாரிப்பு முறை குறித்த விசா ரணை அறிக்கை 26 ஆண்டுகளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்ப ட்ட உறையில் வைத்து மத்திய ராஜீவ்காந்தி கொலைக்கு பயன்படு த்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்த சதித்திட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலையானார். இவ் கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ளனர்.

இவர்களில் பேரறிவாளன், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்க ல் சமர்ப்பித்துள்ளார். அதில், ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடி குண்டை தயாரித்த சதி பற்றி சிபிஐ சரியாக விசாரணைக்குட்படுத்தவில்லை யெனவும்  அது தொடர்பான விசாரணை அறிக்கையை தனக்கு வழங்கும்படி உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 17ம் திகதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், சிபிஐ.க்கும் கட்டளையிட்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இவ் விசாரணை அறி க்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங் நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளார்.

இவ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கக்கூடாதென நீதிபதிக ளிடம் வேண்டியுள்ளார்.  அவ்வேளை குறுக்கிட்ட பேரறிவாளனின் வழக்கறி ஞர் கோபல் சங்கர் நாராயணன், ‘‘நாங்கள் விசாரணை அறிக்கையை எங்க ளிடம் தரும்படி கேட்கவில்லை. நீதிமன்றம் அனுமதி அளித்தால், நீதி மன்ற த்திலேயே அறிக்கையை படித்து பார்க்க தயாராகவுள்ளோம்’’ என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகய், நவீன் சின்கா ஆகியோர், ‘‘மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை படித்தோம். இது பற்றி அடுத்த செவ்வாய்கி ழமை விசாரிக்கப்படும்’’ எனக் கூறி, விசாரணையை 19ம் திகதிக்கு பின் தள்ளி வைத்துள்ளனர்.