Breaking News

நெற்பயிரிடாத நிலங்களை அரசுடமையாக்கப்படுவதாக – ஜனாதிபதி !

நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கை யில் ஈடுபடாத அனைத்து நிலங்களை யும் அரசு உடமைக்கு உட்படுத்துவ தாகவும் பயிர்ச்செய்கைக்காக பிரித்து வழங்குவதற்கான வர்த்தமான அறி வித்தலை தெரிவிக்கவுள்ளதாகவும் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். வற ட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீளவும் பழைய நிலைமைக்குள் எடுத்து பயிர்செய்கையை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை அடுத்த மாதம் செயற்படுத்தவுள்ளதாகவும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், வர்த்தமானி தகவலை தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கக் காணிகள் அனைத்தி லும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். 

பயிரிடப்படாத அனைத்து தனியார் நிலங்களிலும் கட்டாயம் பயிர்ச்செய்கை க்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற சட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 

நாட்டு மக்களை வறுமையிலிருந்து நீக்கி தேசிய பொருளாதாரத்தை பலப்ப டுத்தி, நாட்டின் நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டைக் கட்டி யெழுப்புவதற்காகவே இந்நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. கல்வி, சுகாதாரம், சமூகநலன் பேணல் போன்ற அனைத்துத் துறைகளிலும் நாட்டில் சமமான அபிவிருத்தி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்து ள்ளார்.